பயபடுறியா குமாரு...?
தேநீர் கடைக்கு சென்றால் எப்போதுமே சாலையை நோக்கியே அமறுகிறீர்களா?!
உயரமான இடங்களுக்கு சென்றால் ஏற்படும் ஒரு வினாடி அசட்டு துணிச்சலை கட்டுபடுத்துகிறீர்களா?
முடிவில்லா பள்ளத்தில் விழுவது போல் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துயிருக்குரீர்களா?
அப்படியென்றால் நீயும் என் தோழரே...
வாழ்த்துகள் நமக்கிருக்கும் இந்த உணர்வுக்கு பெயர் "survival instinct". Google அசரீரியிடம் கேட்டபோது இது நம் மூதாதையர்ரான கற்கால மனிதர்களின் மரபணு வழி வந்த ஞபாக நரம்பு என தெரிகிறது.
குகைகளிலும் உயரமான மரங்களிலும் வாழ்ந்தவர்கள் ஆபத்துகளில் இருந்து எப்போதும் தப்பி பிழைத்திருக்கிறார்கள்..
இந்த விழிப்புணர்வு தான் அவர்களை பல இயற்கை பேரழிவுகளிலிருந்தும் வேட்டை விலங்குகளிடமிருந்தும் காத்து இன்றைய உலகம் வரை வர வழிவகை செய்துள்ளது.
Survival Instinct இல்லாத பல பேரினங்கள் அழிந்திருக்கிறன. நம் பங்காளி டைனோசர் அழிந்ததும் அது இல்லாததனால் தான். நம் ஒன்றுவிட்ட தூரத்து சொந்தம் கரப்பான்பூச்சி இன்றுவரை நம்முடன் இருப்பது இந்த உணர்வு இருப்பதால்தான் தான்.
So பயப்படுனும் குமாரு!
Comments
Post a Comment